ஜேர்மனியில் தேவாலயத்தில் துப்பாக்கிசூடு பலர் பலி
ஜேர்மனியின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஹம்பர்க் காவல்துறையின் கூற்றுப்படி, க்ரோஸ் போர்ஸ்டெல் மாவட்டத்தில் உள்ள டீல்போஜ் தெருவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. உள்ளூர் ஊடகங்கள் அந்த இடத்தை யெகோவாவின் சாட்சி மையமாக அடையாளப்படுத்தின.
தாக்குதலாளியும் உயிரிழப்பு
துப்பாக்கிதாரி ஒருவர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. கொல்லப்பட்ட ஆறு பேரில் தாக்குதலாளி ஒருவரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. "ஒரு குற்றவாளி தப்பியோடியதற்கான எந்த அறிகுறியும் எங்களிடம் இல்லை" என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் காரணமாக அருகில் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும், குற்றவாளியைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் பணியாற்றி வருவதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
காவல்துறையின் அறிவிப்பு
#Germany #Tragedy. At least 7 people have been killed in a #shooting at a church in #Hamburg, German police said. News under construction pic.twitter.com/N6cr2JBLJK
— Donato Yaakov Secchi (@doyaksec) March 9, 2023
இது தொடர்பில் டுவிட்டரில் காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குற்றத்திற்கான நோக்கம் குறித்து நம்பகமான தகவல்கள் எதுவும் இல்லை" என்றும், ஊகங்களைப் பகிரவோ அல்லது வதந்திகளைப் பரப்பவோ வேண்டாம் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.