ரணிலின் தேர்தல் பிரசாரத்திற்காக செலவிடப்பட்ட பல மில்லியன் அரச நிதி : பிரதி அமைச்சர் குற்றச்சாட்டு
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேசிய இளைஞர் மன்றத்திலிருந்து பல மில்லியன் ரூபாக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பிரசாரத்துக்காக செலவிடப்பட்டதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர (Eranga Gunasekara) குற்றம் சாட்டியுள்ளார்.
இளைஞர் கழகங்களை தற்போதைய அரசாங்கம், அரசியலுக்காக பயன்படுத்தக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையிலே, இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”தேசிய இளைஞர் மன்றம் மற்றும் இளைஞர் கழகங்களை, முந்தைய அரசாங்கங்களே அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தியிருந்தன.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது, தேசிய இளைஞர் மன்றத்திலிருந்து பல மில்லியன் ரூபாக்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரத்துக்காக செலவிடப்பட்டது.
பிரசாரத்துடன் இணைந்த இசை நிகழ்ச்சிகளுக்கு 536 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதுடன் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் 68 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி
2024 ஆம் ஆண்டு இலங்கை இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் செயலாளராக தரிந்து நவீன் செயற்பட்டு வந்த நிலையில், பாலித ரங்கே பண்டாரவால் அவர் கலகெதரவுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், சம்மேளனத்துக்கான நிதி, அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு மாற்றப்பட்டது.
அரசாங்கம் தற்போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் இளைஞர் சங்கங்களை நிறுவி, மாவட்ட மாநாடுகளை நடத்தியுள்ளதுடன், எதிர்வரும் 12 ஆம் திகதி தேசிய இளைஞர் மாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்தநிலையில், எதிர்க்கட்சித் தலைமையின் கட்டுப்பாட்டை நாடும் ரணில் விக்ரமசிங்க, சில அரசியல்வாதிகளுக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்கு முயற்சிக்கின்றார் என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
