கொழும்பில் வீதிகளுக்கு பூட்டு: வாகன சாரதிகளுக்கு வெளியான அறிவித்தல்
Colombo
Parliament of Sri Lanka
Dinesh Gunawardena
Sri Lankan Peoples
By Thulsi
இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வை முன்னிட்டு நாடாளுமன்ற வீதி மூடப்படும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இதேவேளை பொல்துவ சந்தியில் இருந்து கியென்ஹேம் சந்தி வரையான வீதி இன்று (19.5.2024) பிற்பகல் மூடப்படும் என காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் காவல்துறையினர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராணுவ நினைவுத் தூபி
15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத் தூபிக்கு முன்பாக இடம்பெறவுள்ளன.
பிரதமர் தினேஷ் குணவர்தன (Prime Minister Dinesh Gunawardena) தலைமையில் இடம்பெறவுள்ள குறித்த நிகழ்வில் அரச தலைவர்கள், பாதுகாப்பு படைத் தலைவர்கள், படையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி