தொடர் உயிர்ப்பலி எடுக்கும் மின்னல் தாக்கம் - பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை
நாட்டின் பல மாவட்டங்களுக்கு பலத்த மின்னல் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இன்று முற்பகல் 11 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை அறிவித்தல், நாளை (06) அதிகாலை 1 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல பிரதேசங்களில் இன்று (05) பிற்பகல் அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேவையான முன்னெச்சரிக்கை
வடமேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, மேல், தென் மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும், மன்னார் மாவட்டத்திற்கும் இந்த மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்த்துக்கொள்ளப் பொதுமக்கள் அனைவரும் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கடுமையாகக் கோரப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |