மகளை வன்புணர்ந்த தந்தை : நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு
தான் பெற்ற மகளையே வன்புணர்ந்து அவர் ஒரு பிள்ளைக்கு தாயான நிலையில் நீதிபதி இளஞ்செழியன் தந்தைக்கு கடுழீய சிறைத்தண்டனை விதித்து இன்று(30) தீர்ப்பளித்துள்ளார்.
வவுனியா – சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்த தந்தைக்கே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மகளை வன்புணர்ந்த தந்தை
தாய் வெளிநாடு சென்ற நிலையில் 14 வயதான மகள் தந்தையுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது மகளை தந்தை மூன்று முறை வன்புணர்விற்கு உட்படுத்தியுள்ளார்.
14 வயது மகளான சிறுமி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்த போது கர்ப்பமாக இருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து மரபணு பரிசோதனையின் போது சிறுமியின் தந்தையே பிறந்த ஆண் குழந்தைக்கு தந்தையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
12 ஆண்டுகள் கடூழிய சிறை
இதனை தொடர்ந்து அரச சட்டத்தரணி தர்சிகா திருக்குமரநாதன் வழக்கை நெறிப்படுத்தியுள்ளார். இதற்கமைய, குறித்த நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை, ரூ.30,000 தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளதோடு, கட்டத்தவறும் பட்சத்தில் 3 மாத கால கடூழிய சிறை மற்றும் ரூ.6 இலட்சம் நட்ட ஈடும், அதனை கட்டத்தவறும் பட்சத்தில் 18 மாத கால கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |