பகலில் மாயமான மனிதர்களின் நிழல்: காரணம் என்ன தெரியுமா!
இலங்கையில் இன்றைய தினம் வெயில் சுட்டெரிக்கும் போது வெளியில் இருந்த மக்களின் நிழல்களும் சிறிது நேரத்தில் மறைந்துள்ளது.
பூமி சூரியனைச் சுற்றிச் சுழலும் போது, சில நேரங்களில் சூரியன் பூமியில் சில இடங்களுக்கு நேராக உச்சம் கொடுக்கும்.
அவ்வாறான வேளைகளில், பூமியின் சில இடங்களில் நேரடியாக சூரிய ஒளி படுவதால், அந்த இடங்களில் இருக்கும் பொருட்களின் நிழல்கள் தற்காலிகமாக மறைந்துவிடும்.
காரணம்
அத்தைகைய நாட்கள் ஜீரோ ஷேடோ டே(zero shadow day) என்று அழைக்கப்படுகின்றன.
இவ்வருடம் ஏப்ரல் 5ஆம் திகதி முதல் ஏப்ரல் 15ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு சூரியன் இலங்கைக்கு மேல் பயணிக்கவுள்ளது.
அதன்படி, இன்று (07) மதியம் 12.12 மணியளவில் சூரியன் உச்சம் கொடுத்ததன் விளைவாக வெளியே இருந்த மக்களின் நிழல் ஒரு கணம் மறைந்தது.
கண்காணிப்பு
கங்காராம மலைத்தொடரில் இந்த நிகழ்வை அவதானிக்க வானியலாளர்கள் ஒரு பகுப்பாய்வு மையத்தை தயார் செய்திருந்தனர்.
அதன்போது, நண்பகலுக்கு முன் திறந்த வெளியில் சுமார் ஒரு அடி நீளமுள்ள கம்பி கம்பி போன்ற ஒன்றை வைத்து அதன் நிழலைக் கவனித்து இந்த நிலைமை கண்காணிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |