பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் அரசியலில் நுழைந்தார்
பங்களாதேஷ் கிரிக்கெட் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன், எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட ஆளும் பங்களாதேஷ் கட்சியில் இணைந்துள்ளார்.
அடுத்தவருடம் ஜனவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிட ஆளும் பங்களாதேஷ் அவாமி லீக்கின் வேட்புமனுவைக் கோரி, முறைப்படி அரசியலில் நுழைந்துள்ளார்.
உறுதிப்படுத்திய கட்சியின் செயலாளர்
அவாமி லீக் இணைச் செயலாளர் பஹவுதீன் நசிம், ஷாகிப் அல் ஹசன் தமது கட்சியில் இணைந்ததை உறுதிப்படுத்தினார்.
தேர்தலை முக்கிய எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளன.
"அவர் ஒரு பிரபலம் மற்றும் நாட்டின் இளைஞர்களிடையே பெரும் புகழ் பெற்றவர்," என்று நசிம் கூறினார்.
ஷகிப்பின் வேட்புமனுவை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் கட்சி நாடாளுமன்ற குழு உறுதி செய்ய வேண்டும்.
மத்யூஸுக்கு எதிரான ஆட்டமிழப்பு சர்ச்சை
அவர் தனது தென்மேற்கு சொந்த மாவட்டமான மகுரா அல்லது தலைநகர் டாக்காவில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று நசிம் கூறினார்.
உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான போட்டியின் போது ஏஞ்சலோ மத்யூஸுக்கு எதிரான வழக்கத்திற்கு மாறான முறையீட்டிற்குப் பிறகு அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |