ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வா
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஷான் விஜயலால் டி சில்வா ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்.
அவரது கூற்றுப்படி, இன்றைய தினம் (01) அவர் உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
ஷான் விஜயலால் டி சில்வா கடந்த பொதுத் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்
இந்நிலையில் ஷான் விஜயலால் டி சில்வா அதற்கு முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராக இருந்து பின்னர் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டார்.
மேலும் அவர் இப்போது, உத்தியோகபூர்வமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
பிரதான அமைப்பாளராக
தற்போது ஷான் விஜயலால் டி சில்வா எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் அம்பலாங்கொடை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |