தடுப்பூசி தொடர்பான மற்றுமொரு முக்கிய அறிவிப்பை சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள சவேந்திர சில்வா!
vaccine
corona
shavendra silva
sri Lanka
booster
By Kalaimathy
நாடளாவிய ரீதியில் கொரோனாத் தடுப்பூசியின் மூன்றாவது டோஸான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முப்படையினர், காவல்துறையினர், சுற்றுலாத் துறையினர் மற்றும் ஏனைய முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.