ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பிணை.... விதிக்கப்பட்ட பயணத்தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Mahinda Rajapaksa Shiranthi Rajapaksa Colombo National Hospital Law and Order
By Sathangani Oct 16, 2026 10:30 AM GMT
Report

புதிய இணைப்பு

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்‌சவை, பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (16) உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் சந்தேகநபர் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த சமர்ப்பணங்களைக் கருத்தில் கொண்ட கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம், இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

அதன்படி, தலா ஒரு கோடி ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் ஒரு இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது. 

 பைபாஸ் அறுவை சிகிச்சை 

தேசிய வைத்தியசாலையினால் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விசேட விடயங்களைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி, ஷிரந்தி ராஜபக்சவுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பிணை.... விதிக்கப்பட்ட பயணத்தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Shiranthi S Health Condition Report Submit Court

அந்த அறிக்கையைப் பரிசீலிக்க வேண்டியுள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் திலீப பீரிஸ் தெரிவித்ததைத் தொடர்ந்து, வழக்கு இன்று பிற்பகல் 2.45 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஷிரந்தி ராஜபக்ச சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, அவரது இதயத்தின் இடது பிரதான தமனியில் 80 முதல் 90 சதவீத அடைப்பு காணப்படுவதாகவும், அவசரமாக இதயப் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததுடன் அவரது உடல்நிலையைக் கருத்திற்கொண்டு பிணை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கில் முதலாவது சந்தேகநபரான பிரதீப் காரியவசம் ஏற்கனவே பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். 

தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான 10 மில்லியன் ரூபாயை, ‘சிரிலிய சவிய’ அமைப்பிற்கு சட்டவிரோதமாக மாற்றியமைத்த குற்றச்சாட்டின் பேரில், ஷிரந்தி ராஜபக்ச அண்மையில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இரண்டாம் இணைப்பு

பைபாஸ் அறுவை சிகிச்சை அவசியம்! ஷிரந்தி தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை

தேசிய சேமிப்பு வங்கியினால் ‘சிரிலிய சவிய’ அமைப்புக்கு 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷிரந்தி ராஜபக்சவின் மருத்துவ அறிக்கை இன்று (16) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாக நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது.

மருத்துவ அறிக்கையைப் பரிசீலித்த நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரின் கையொப்பத்துடனான மறைப்புக் கடிதத்துடன் அந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஞானசார தேரரின் விடுதலை: போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் புத்தசாசன அமைச்சில் பேச்சுவார்த்தை

ஞானசார தேரரின் விடுதலை: போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் புத்தசாசன அமைச்சில் பேச்சுவார்த்தை

வழக்கின் மேலதிக நடவடிக்கை

ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை தொடர்பான விபரங்கள் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்த நீதவான், அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பிணை.... விதிக்கப்பட்ட பயணத்தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Shiranthi S Health Condition Report Submit Court

இதன்போது, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், குறித்த மருத்துவ அறிக்கையைப் பரிசீலித்த பின்னர் தமது தரப்பு கருத்துகளை முன்வைக்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினார்.

இதனையடுத்து, வழக்கின் மேலதிக நடவடிக்கைகளைப் பிற்பகல் 2.45 மணி வரை ஒத்திவைக்க நீதவான் உத்தரவிட்டார்.   

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கெதிராக பாய்ந்த ரணிலின் சட்டம்

காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கெதிராக பாய்ந்த ரணிலின் சட்டம்

முதலாம் இணைப்பு  

ஷிரந்தி தொடர்பில் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள முக்கிய அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்‌சவின் உடல்நிலையைப் பரிசோதிப்பதற்காக நியமிக்கப்பட்ட மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன்படி, குறித்த அறிக்கை இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சம்பத் இந்திக குமார தெரிவித்துள்ளார்.

குறித்த மருத்துவ அறிக்கை தமக்குக் கிடைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் இந்த அறிக்கை இன்று சிறைச்சாலைகள் ஆணையாளர் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

கிரிஷ் ஒப்பந்த நிதி மோசடி : தொழிலதிபரின் அறிவிப்பு

கிரிஷ் ஒப்பந்த நிதி மோசடி : தொழிலதிபரின் அறிவிப்பு

நீதிமன்றின் உத்தரவு 

ஷிரந்தியின் சுகாதார நிலைமை தொடர்பில் ஆராய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் 14 விசேட மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு அண்மையில் நியமிக்கப்பட்டது.

ஷிரந்தி ராஜபக்‌சவுக்கு பிணை.... விதிக்கப்பட்ட பயணத்தடை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Shiranthi S Health Condition Report Submit Court

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்கு கடந்த 13ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஷிரந்தி ராஜபக்‌சவை இன்று (16) வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில் ஷிரந்தி ராஜபக்‌சவின் உடல்நிலை குறித்த மருத்துவக் குழுவின் பரிந்துரைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

களுத்துறை இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

களுத்துறை இரட்டைக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது!

ஜனாதிபதி செயலகம் அருகே கூடாரம் அமைக்க முற்பட்ட பிக்குகளால் பதற்றம்

ஜனாதிபதி செயலகம் அருகே கூடாரம் அமைக்க முற்பட்ட பிக்குகளால் பதற்றம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016