யாழில் முளைத்த திடீர் பணக்காரர்களுக்கு செக் : முடக்கப்பட்ட 8.5 கோடி ரூபாய் சொத்துக்கள்
யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8.5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பணமும் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாண நீதிமன்றத்தின் பொறுப்பிலுள்ள 15 மில்லியன் ரூபாய் பணமும், யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 70 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீடொன்றுமே இவ்வாறு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் குறித்த உத்தரவுகள் நேற்று (15) முதல் 14 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
போரட்டத்தில் ஈடுபட்ட தேரர்களிடம் வாசிக்கப்பட்ட நீதிமன்ற அறிக்கை! கூடாரங்களை அகற்ற தயாராகும் காவல்துறை
சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு
கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் 31ஆம் திகதி யாழ்ப்பாண விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகளினால் 15 மில்லியன் ரூபாய் பணம், லொறி ஒன்றுடன், 5 பேரையும் கைது செய்து கோப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இதுதொடர்பாகச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் யாழ்ப்பாணம் - மாதகல் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேக நபரொருவர், போதைப்பொருள் வர்த்தகத்தின் மூலம் ஈட்டிய பணத்தைக் கொண்டு 7 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான இரு மாடி வீட்டை நிர்மாணித்துள்ளமை தெரியவந்துள்ளது.
ஆரம்பக் கைதின் போது கைப்பற்றப்பட்ட 15 மில்லியன் ரூபாய் பணம் தற்போது யாழ்ப்பாணம் நீதிமன்றத்தின் காவலில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைச் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |