இஸ்ரேல் போர் தொடர்பில் எகிப்து வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
ஹமாஸ் படையினரின் தாக்குதல் தொடர்பில் முன்னதாகவே எச்சரிக்கை வழங்கப்பட்டதாகவும் இஸ்ரேல் அரசு அதனை நிராகரித்துவிட்டதாகவும் எகிப்து உளவுத் துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த எகிப்து உளவுத் துறை அதிகாரி, இஸ்ரேல் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்த காஸா பகுதிக்குட்பட்ட பகுதியில் திட்டம் தீட்டப்படுவதாக பலமுறை இஸ்ரேலுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஆனாலும், அது குறித்து விரிவாக பரிசீலிக்காமல் ஜெரூசலேம் அதனை நிராகரித்துள்ளது.
பிரதான பேசு பொருள்
இதனால்,இஸ்ரேலின் புலனாய்வு பிரிவு மொசாட் பலவீனப்பட்டு விட்டதா? என்ற கேள்வி தற்போது உலகின் பிரதான பேசு பொருளாக உள்ளது, எனினும் அது உண்மையல்ல என அரசியல் ஆய்வாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஹமாஸ் இயக்கத்தின் தாக்குதல் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவு மொசாட்டால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று எனவும் மொசாட் அதனை வலிந்து ஏற்படுத்திக் கொண்டுள்ளனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.