இலங்கையில் அதிர்ச்சி தகவல் : அதிகரிக்கும் விவாகரத்து
Sri Lanka
Divorce
By Sumithiran
இலங்கையில் சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களுக்குப் பெண்களே தலைமை தாங்குகின்றனர் என்றும், நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து விகிதம் காரணமாக இந்தக் குடும்பங்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனிப் பல்கலைக்கழக சமூகவியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனோஷா எதிரிசிங்க, நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார்.
இலங்கைச் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் பங்கு
இதன்போது, இலங்கைச் சமூகத்தில் பெண்கள் வகிக்கும் குறிப்பிடத்தக்க பங்கையும் அவர் சுட்டிக்காட்டினார்.
பெண்களின் நிதி நிலைத்தன்மையை வலுப்படுத்துவது அவர்களின் குடும்பங்களின் நல்வாழ்வுக்கும் பரந்த சமூகத்துக்கும் அத்தியாவசியமானது என்று அவர் வலியுறுத்தினார்.
எனவே, பெண்களுக்குப் பொருளாதார ரீதியாக அதிகாரம் அளிக்க வேண்டியதன் அவசரத் தேவையையும் அவர் குறிப்பிட்டார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
