கடற்றொழிலாளர் ஒருவரை கட்டிவைத்து கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காணொளி
மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்றொழிலாளர் ஒருவரை கட்டி வைத்து கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.
விடத்தல்தீவு கடற்பரப்பில் உள்ள கடற்றொழிலாளர் ஒருவரின் அட்டைப் பண்ணையில் இருந்து கடல் அட்டையை திருடியதாகக் கூறி குறித்த கடற்றொழிலாளர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கடற்றொழிலாளரைப் பிடித்து வைத்து கொடூரமாகத் தாக்கி காணொளி பதிவு செய்த நிலையில் அந்தக் காணொளி தற்போது பகிரப்பட்டு வருகிறது.
இச் சம்பவம் நேற்றுமுன்தினம்(23) அதிகாலை இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
கடற்றொழிலாளரின் நிலை
கடும் தாக்குதலுக்கு உள்ளானவர் இலுப்பைக் கடவை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியத் வருகின்றது.

சம்பவ தினமான திங்கள் அதிகாலை விடத்தல் தீவு கடற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள அட்டை பண்ணையில் அந்த கடற்றொழிலாளர் சென்று அட்டையை பிடித்ததாகக் கூறி அவரை இருவர் பிடித்து கட்டிவைத்து கடுமையாக தாக்கி மன்னிப்பு கேட்க வைத்து காணொளி பதிவு செய்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான கடற்றொழிலாளரின் நிலை என்ன என்று இது வரை தெரியவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக இலுப்பைக்கடவை காவல்துறையினரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ள போதும், இது வரை காவல்துறையினர் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.