நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம்
Anuradhapura
Sri Lanka Police Investigation
By Vanan
நாடாளுமன்ற உறுப்பினர் உதித்த பிரேமரத்னவின் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரத்திலுள்ள தனது வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அடையாளம் தெரியாத நபர்களினால்
வாகனமொன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தினால் எவருக்கும் எந்தவித பாதிப்பும் கிடையாது என காவல்துறையினர் கூறுகின்றனர்.
துப்பாக்கி பிரயோகத்தை நடாத்திய நபர்கள், தப்பி சென்றுள்ள நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மரண அறிவித்தல்