மொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு!
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Kanna
மொரட்டுவ - கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
உந்துருளியில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த நபர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அலுபோமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.


மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி