எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமா? வெளியான அறிவிப்பு
நாட்டில் எரிபொருளுக்கான விலையை அதிகரிக்குமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐ ஓ சி நிறுவனம் நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்த நிலை அதற்கான பதில் இதுவரை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் எரிபொருளுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் டொலர் இன்மையால் எரிபொருள் கொள்வனவு செய்வது தொடர்பில் தொடர்ந்தும் சிக்கல் நிலவுவதாக கனிய எண்ணெய் பொது சேவையாளர் சங்கத்தின் தலைவர் அஷோக ரன்வல (Ashoka Ranwala) தெரிவித்துள்ளார்.
கனிய எண்ணெய் கூட்டுத்தாபனமானது கையிருப்பில் உள்ள நிதியைக் கொண்டு நாளாந்தம் எரிபொருளைக் கொள்வனவு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே சர்வதேச நாடுகளுடன் ஒன்றிணைந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான உரிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.