நாட்டில் மீண்டும் பால்மாவிற்கு ஏற்பட்டப் போகும் தட்டுப்பாடு! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
People
SriLanka
Milk Powder
By Chanakyan
நாட்டில் மீண்டும் பால்மாவை இறக்குமதி செய்வதில் மீள பிரச்சினை எழுந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஜனவரி மாதம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவுக்கான கட்டணம் இதுவரையில் செலுத்தப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய பால்மா இறக்குமதிக்கு தேவையான டொலரை பெற்று தருமாறு நிதியமைச்சிடம் கோரிக்கை விடுப்பதாக இறக்குமதியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பால்மாவிற்கான பெரும் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைகளின் பின்னர் குறித்த பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வினை பெற்றுக் கொடுத்திருந்தது.
இந்நிலையில் மீண்டும் பால்மாவிற்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலைமை உருவாகியுள்ளதாக இறக்கமதியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்