மருந்துகளுக்கான தட்டுப்பாடு அதி உச்சம் - மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள்

Mannar Sri Lanka Economic Crisis Economy of Sri Lanka
By Vanan Jun 12, 2022 03:02 AM GMT
Report

 மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக மருத்துவத்துறையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் பல முக்கியமான மருந்து வகைகள் கையிருப்பில் இல்லை.

இதனால் தேவையில்லாமல் வாள்வெட்டுச் சம்பவங்கள், வீதி விபத்தில் காயமடைதல், குளங்களில் மூழ்குதல் போன்ற அவசியமற்ற விடயங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேவையில்லாமல் வாள்வெட்டுச் சம்பவங்கள், வீதி விபத்தில் காயமடைதல், குளங்களில் மூழ்குதல் போன்ற அவசியமற்ற விடயங்களில் தேவையில்லாமல் காயமடைந்து வருபவர்களுக்கு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளும் போது உண்மையான தேவையுடைய நோயாளிகளுக்கு மருத்துவ சேவை செய்ய முடியாமல் போகிறது.

உண்மையான தேவையுடைய நோயாளிகளுக்கு மருத்துவ சேவை செய்ய முடியாத நிலை

மருந்துகளுக்கான தட்டுப்பாடு அதி உச்சம் - மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள் | Shortages Of Medicine Sri Lanka Mannar Rdhs

அத்துடன் சுப்பர் பெட்ரோல் இல்லாத காரணத்தால் மன்னார் மாவட்டத்தில் 5 இற்கு மேற்பட்டநோயாளர்காவு வண்டிகள் இயங்காமல் இருக்கிறது.

வீதி விபத்துக்கள், வாள்வெட்டுக் காயங்கள் போன்ற பலவிதமான அவசர மருத்துவ சேவைக்கு வருபவர்கள் காத்திருக்க வேண்டியுள்ளதுடன் உயிரிழப்புகள் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.

அண்மைய நொச்சிக்குளம் சம்பவம் கூட மிகவும் கவலைக்குரிய விடயமே.

மருந்துகளுக்கான தட்டுப்பாடு அதி உச்சம் - மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள வேண்டுகோள் | Shortages Of Medicine Sri Lanka Mannar Rdhs

எனவே தற்போதைய நாட்டினதும் ஒவ்வொரு குடும்பத்தின் நெருக்கடியான சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, களியாட்டங்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள், வீதி விபத்துக்கள் போன்ற மனித குலத்திற்கு தேவையில்லாத செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தர்மராஜா வினோதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி