பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய தலைவர் நியமனம்!
2025ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் (Indian Premier League) கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் 18ஆவது தொடருக்கான வீரர்களின் மெகா ஏலமானது நேற்றுமுன் தினம் (11.01.2025) சவுதி அரேபியாவில் (Saudi Arabia) உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது.
இந்திய வீரர்
இதில் மொத்தம் 574 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். அந்தவகையில் நடைபெற்று முடிந்த இந்த மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
மேலும், ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட 2ஆவது வீரர் என்ற பெருமையை ஸ்ரேயாஸ் ஐயர் பெற்றுள்ளார்.
முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர் அந்த அணிக்கு மூன்றாவது ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்தார்.
இதேவேளை, எதிர்வரும் மார்ச் 23 ஆம் திகதி ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
𝘞𝘪𝘵𝘩 𝘨𝘳𝘦𝘢𝘵 𝘱𝘰𝘸𝘦𝘳 𝘤𝘰𝘮𝘦𝘴 𝘨𝘳𝘦𝘢𝘵 𝘳𝘦𝘴𝘱𝘰𝘯𝘴𝘪𝘣𝘪𝘭𝘪𝘵𝘺! 💫#CaptainShreyas #SaddaPunjab #PunjabKings pic.twitter.com/jCYtx4bbVH
— Punjab Kings (@PunjabKingsIPL) January 12, 2025
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |