வத்தளை காவல் நிலைய காவல்துறை உப பரிசோதகர் கைது!
திருட்டு சம்பவமொன்றுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபரை மிரட்டி அவரிடமிருந்து 80,000 ரூபாயைப் பறித்த குற்றச்சாட்டின் பேரில் காவல்துறை உப பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது, களனி குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் வத்தளை காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை உப பரிசோதகர் என தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்ற நடவடிக்கை
இதேவேளை, கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே சம்பந்தப்பட்ட திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், திருடப்பட்ட பொருட்களைத் தேடுவதாகக் கூறி, குறித்த உப பரிசோதகர் அடங்கிய குழுவினர் அந்நபரை முறைப்படி கைது செய்யாமல் வத்தளை பகுதிக்கு அழைத்துச் சென்று அவரை அச்சுறுத்தி, மிரட்டிப் பணத்தைப் பறித்துள்ளதாக விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்டுள்ள காவல்துறை உப பரிசோதகரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |