சியா விதைகளை இப்படி சாப்பிடுவது ஆபத்து : எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்
ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்து கொள்ள நினைக்கும் ஃபிட்னஸ் மற்றும் டயட் ஆர்வலர்கள் மத்தியில் சமீப காலமாக சியா விதைகள் மிகவும் பிரபலமாக உள்ளது.
ஸ்மூத்தி முதல் புட்டிங் வரை பலவற்றில் சேர்த்து கொள்ள கூடியதாக இருக்கிறன்றன சியா விதைகள்.
சியா விதைகள்
ஒரு தனித்துவமான உணவு நிற நிலையில் இருந்து ஒரு முக்கிய சூப்பர்ஃபுட் என்ற நிலைக்கு அமைதியாக சியா விதைகள் மாறியுள்ளன.
நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களுடன் இந்த சிறிய கருப்பு மற்றும் வெள்ளை விதைகள் இப்போது உலகளவில் சுகாதார விழிப்புணர்வில் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன.
இதய ஆரோக்கியம், சிறந்த செரிமான ஆரோக்கியம், எடை மேலாண்மை மற்றும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் திறன் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குவதன் காரணமாக சுகாதார நிபுணர்களும் இவற்றை டயட்டில் சேர்த்து கொள்ள பரிந்துரைக்கிறார்கள்.
முக்கிய எச்சரிக்கை
நீங்கள் உடற்பயிற்சி ஆர்வலராக இருந்தாலும் சரி, ஆரோக்கியமாக சாப்பிட முயற்சிப்பவராக இருந்தாலும் சரி சியா விதைகள் உங்களை போன்றோருக்கு ஒரு முக்கிய அங்கமாக மாறி வருவதை சமீப ஆண்டுகளாக கண்கூடாக பார்த்திருப்பீர்கள்.
சமூக ஊடகங்களில் 'thestomachdoc' மற்றும் 'Dr GI Joe' என்று பிரபலமாக அறியப்படும் அமெரிக்க மருத்துவரானஜோசப் சல்ஹாப், சியா விதைகளை தவறாமல் எடுத்து கொள்பவர்களுக்கு ஒரு முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சியா விதைகளை அப்படியே நேரடியாக சாப்பிடுவது உங்களை மருத்துவமனையில் சேர்க்கும் நிலைக்கு தள்ளக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏனென்றால் உணவுகளை விழுங்குவதில் ஏற்கனவே சிக்கல் இருந்த ஒருவர், சியா விதைகளை சாப்பிட்டு, அது அவரது உணவுக் குழாயில் சிக்கியதை தொடர்ந்து, சிக்கிய சியா விதைகளை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்ததாக ஒரு சம்பவம் குறித்து பகிர்ந்து கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
