சிகிரியாவில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த புதிய நடவடிக்கை
சர்வதேச கலைஞர்களை ஈர்ப்பதற்காகவும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பதற்காக தண்ணீர் திருவிழாக்களை நடத்துவதற்கும் இலங்கை (Sri Lanka) திட்டமிட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் சாலக கஜபாகு (Salaka Gajabaku) தெரிவித்துள்ளார்.
அத்துடன் செப்டம்பர் முதல் டிசம்பர் வரை சில சர்வதேச கலைஞர்களை வைத்து சிகிரியாவில் ஆடை அலங்கார அணிவகுப்பையும் (பேஷன் ஷோ) நடத்த உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
சுற்றுலாப் பயணிகள்
2024 ஆம் ஆண்டில் இலங்கை 2.3 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இது 2.5 மில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இலங்கையின் நீர் விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தும் வகையில் திருகோணமலை (Trincomalee), அருகம்பே மற்றும் கல்பிட்டி போன்ற கரையோர நகரங்களில் நீர் திருவிழாவை நடத்தவும் இலங்கை திட்டமிட்டுள்ளது என இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |