மனித புதைகுழிகளுக்கு சர்வதேச நீதி கோரி யாழில் கையெழுத்து போராட்டம்
Jaffna
SL Protest
Eastern Province
Northern Province of Sri Lanka
chemmani mass graves jaffna
By Sathangani
சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணம் - மருதனார்மடத்தில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி உள்ளிட்ட வடக்கு கிழக்கில் காணப்படும் மனித புதைகுழிகளுக்கும் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி கோரி இன்று (15) காலை குறித்த போராட்டம் நடைபெற்றது.
மாற்றத்திற்கான இளையோர் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது.
கையெழுத்துப் போராட்டம்
இந்தப் போராட்டத்தில் மாற்றத்திற்கான இளையோர் அமைப்பின் பிரதிநிதிகள், உறுப்பினர்கள், யாழ் மருதனார்மடம் வர்த்தகர்கள், சந்தை வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் இந்த கையெழுத்துப் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |






1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி