பண்டிகையை முன்னிட்டு ஹட்டனுக்கு படையெடுக்கும் மக்கள்
hatton
sri lanka
new year
By Shalini
வரவிருக்கும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அதிகளவான மக்கள் இன்று (12) ஹட்டனுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் ஆடைகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களை வாங்க இவ்வாறு மக்கள் வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நகரத்திற்குள் நுழையும் மக்களுக்காக ஏராளமான தனியார் மற்றும் இ.போ.ச பஸ்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் சதொச கிளையில் ஏராளமான வாடிக்கையாளர்கள் உணவுப் பொருட்களை வாங்க வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்