யாழ்ப்பாணம் உட்பட பலபகுதிகளுக்கு புதுவருடத்தை முன்னிட்டு இடம்பெறவுள்ள விசேட சேவை
srilanka
sinhala and tamil new year
By Vasanth
யாழ்ப்பாணம் உட்பட பல்வேறு இடங்களுக்கான விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டு காலத்தை முன்னிட்டே இந்த விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 9 தொடக்கம் 13, 14 ஆம் திகதிகளில் இந்த விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி யாழ்ப்பாணம், பதுளை, களுத்துறை தெற்கு, வெயாங்கொட, அநுராதபுரம், குருணாகல், பெலியத்த, மாத்தறை, மருதானை, காலி ஆகிய இடங்களுக்கான ரயில் சேவை இந்தக் காலப்பகுதியில் அமுலில் இருக்கும் என்றும் ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இக் காலப் பகுதியில் பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்துவோர் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி மிகவும் அவதானத்துடன் தமது பயணத்தை மேற்கொள்ளுமாறு ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்