ராஜபக்ஷர்களுக்கு எதிராக சிங்களவர்கள் போர்க்கொடி
இத்தாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு அந்த நாட்டில் உள்ள இலங்கை சிங்களவர்கள் கறுப்பு கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ராஜபக்ஷக்கள் அல்லது இலங்கைத் தலைவர்கள் வௌிநாடு செல்லும் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள், தமிழ் டயஸ்போராக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யும் காலம் மாறி, இன்று ராஜபக்ஷர்கள் வௌிநாடு செல்லும் போது வௌிநாட்டில் உள்ள சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு இத்தாலியில் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் தற்போதை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களே.
உள்நாட்டில் அவசரகாலச் சட்டம் போட்டு மக்களின் ஆர்ப்பாட்டத்தை முடக்க முற்பட்டாலும் வௌிநாட்டில் உள்ள இலங்கையர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு முடக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.