நாடு பூராகவும் நிறுவப்படவுள்ள சினோபெக் கிளைகள்: கஞ்சன விஜேசேகர
Colombo
Kanchana Wijesekera
Sri Lanka Fuel Crisis
By Shadhu Shanker
சீன எரிபொருள் நிறுவனமான ‘சினோபெக்’ எதிர்வரும் 25ஆம் திகதிக்குள் நாடு முழுவதும் தமது கிளைகளை நிறுவவுள்ளதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சினோபெக் நிறுவனம் தமது முதலாவது எரிபொருள் நிரப்பு நிலையத்தை ஆரம்பித்துள்ளது.
அதேவேளை, நாடு பூராகவும் 150 நிலையங்களை ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
ஏனைய நிலையங்களின் ஒப்பந்தங்கள்
12 இடங்களைத் தவிர ஏனைய நிலையங்களின் ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அவுஸ்திரேலிய யுனைடட் பெட்ரோலிய நிறுவனமும் இவ்வருடத்துக்குள் தமது சேவையை நாட்டில் ஆரம்பிக்கும் என்வும் சுட்டிக்காட்டியுள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்