சினோபெக் நிறுவனம் தொடர்பில் அநுர தரப்பு வெளியிட்ட தகவல்
இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய முதலீடாகக் கருதப்படும் சீனாவின் சினோபெக் நிறுவனம் இலங்கைக்குள் பிரவேசம் செய்தது தேசிய மக்கள் சக்தி (NPP)அரசாங்கத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் லக்மாலி ஹேமச்சந்திர (Lakmali Hemachandra) தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடகம் ஒன்றில் அரசியல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சினோபெக்
மேலும் கருத்து தெரிவித்த அவர், “2007 ஆம் ஆண்டு முதல் சினோபெக் இலங்கையில் பல்வேறு அரசாங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
இருப்பினும், அந்தப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் மட்டுமே ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதன்படி, முந்தைய அரசாங்கங்களின் போது சினோபெக்குடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அத்தகைய ஒப்பந்தங்கள் எதுவும் யதார்த்தமாகவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
