சீன தடுப்பூசி போட்டவாரா நீங்கள்? ஆய்வில் புதிய தகவல்
sri lanka
sinopharm vaccine
Chandima Jeevanthara
decliningn
By Vanan
சீனாவின் சைனோபாம் தடுப்பூசியினால் உருவாக்கப்படும் எதிர்ப்பு சக்தி விரைவாக குறைவடைகின்றமை ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
டுவிட்டர் பதிவொன்றில், சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர ( Chandima Jeevanthara) இதனை உறுதிசெய்துள்ளார்.
நாட்டில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளினால் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூன்று மாதங்களில் குறைவடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்கள் கடந்தவர்கள், பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
