திலீபனின் நினைவேந்தல் வழக்கில் கைதான சிவாஜிலிங்கம் விடுதலை
Colombo
Sri Lanka
By Shalini Balachandran
திலீபனின் நினைவேந்தலை அனுஸ்டித்தமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(29) வழங்கிய உத்தரவின் கீழ் இவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வழக்கானது பயங்கரவாத விசாரணை பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
விடுதலை
இந்த வழக்கு தொடர்பான சமர்ப்பணங்களை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி கடந்த 24ஆம் திகதி முன்வைத்திருந்தார்.
இந்தநிலையில், சமர்ப்பணங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த வழக்கில் இருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி