மட்டக்களப்பில் இடம்பெற்ற தராக்கி டி. சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

By Rusath Apr 28, 2026 01:05 PM GMT
Report

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் தராக்கி டி. சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (28.04.2026) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன், சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினம் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்கள் மற்றும் அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் போது, தராக்கி சிவராமின் உருவப்படத்திற்கு மாநகர மேயர் சிவம் பாக்கியநாதன் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா. துரைரெத்தினம் ஆகியோர் இணைந்து மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

நினைவு உரை

தொடர்ந்து ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அகவணக்கமும் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பில் இடம்பெற்ற தராக்கி டி. சிவராமின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு | Sivaram S 21St Anniversary Commemoration Event

அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நினைவு உரைகளில், சிரேஷ்ட ஊடகவியலாளர்களான செ. பேரின்பராசா, இரா. துரைரெத்தினம் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வ. சக்திவேல் ஆகியோர், தராக்கி சிவராமின் ஊடகப் பங்களிப்புகள் மற்றும் அவரது அர்ப்பணிப்பை நினைவுகூர்ந்து உரையாற்றினர்.

இந்நிகழ்வு, தமிழ் ஊடக வரலாற்றில் முக்கிய இடம் பெற்ற தராக்கி சிவராமின் சேவையை நினைவுகூரும் வகையில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மகசீன் சிறையில் மெக்ஸிகோ பலிகள்! சிக்கிய அதிகாரிகள்!

மகசீன் சிறையில் மெக்ஸிகோ பலிகள்! சிக்கிய அதிகாரிகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி