கஜமுத்துவுடன் 6 சந்தேகநபர்கள் கைது! தொடரும் விசாரணைகள்
கஜமுத்து (யானை முத்து) என சந்தேகிக்கப்படும் பொருளுடன் ஆறு சந்தேகநபர்கள் தம்பலகாமம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த மோட்டார் ரக வாகனமும், முச்சக்கரவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தம்பலகாமம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட தம்பலகாமம் - கிண்ணியா வீதியில் உள்ள 'ரத்து பாலம' (சிவப்பு பாலம்) அருகில் நேற்று (2026.06.26) காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, தம்பலகாமத்தில் இருந்து கிண்ணியா நோக்கி பயணித்த மோட்டார் ரக வாகனத்தை மறித்து காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த சோதனையின்போது, வாகனத்திற்குள் கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தம்பலகாமம் காவல்நிலையப் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதனைதொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்நிலையப் பொறுப்பதிகாரி, குறித்த கஜமுத்துவையும் அதனுடன் பயணித்த நபர்களையும் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கைது செய்யப்பட்ட 6 சந்தேகநபர்களும் கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கோட்டாக்கு எதிராக CIDயில் முறைப்பாடு: வரலாற்று சிறப்புமிக்க விகாரையில் அரிய இரத்தினக்கற்கள் திருட்டு
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்