அதிரும் உலகம்: வெளிநாடொன்றில் 24 மணிநேரத்தில் 5 நிலநடுக்கங்கள் - அச்சத்தில் மக்கள்
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 5 முறை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என்றாலும் அடுத்தடுத்து ஏற்பட்ட நில அதிர்வுகளால் பாகிஸ்தான் மக்கள் அச்சமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று சனிக்கிழமை காலை 6.15 மணியளவில், மீண்டும் ரிக்டர் அளவுகோலில் 4.3 நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (NCS) தெரிவித்துள்ளது.
வெனிசுலா நிலநடுக்கம்
வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, இன்றைய தினம் (27) மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆகப் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கமும் அந்நாட்டின் வடக்குக் கடற்கரைப் பகுதியை மையமாகக் கொண்டே ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை வெனிசுலா ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவான மிகச் சக்திவாய்ந்த நிலநடுக்கத்திற்கு முகங்கொடுத்திருந்தது.
அந்த நிலநடுக்கத்தின் காரணமாக இதுவரையில் 900க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அனர்த்த நிலைமையைத் தொடர்ந்து அந்நாட்டின் 1,000க்கும் மேற்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் சேதமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்களால் வைத்தியசாலைகள் நிறைந்து காணப்படுவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 1 நாள் முன்