சர்வகட்சி மாநாட்டைப் புறக்கணிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி!
சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் தீர்மானித்துள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க (Tissa Attanayake) தெரிவித்துள்ளார்.
கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின்போதே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சர்வக்கட்சி மாநாடென்பது ஊடக கண்காட்சியெனவும், பிரச்சினைகளை தீர்க்கும் உண்மையான நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தாம் ஏன் மாநாட்டை புறக்கணித்தோம் என்பது குறித்த விரிவான ஒரு அறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதேவேளை, சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கப்போவதில்லை என ஜே.வி.பியினரும் மற்றும் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் கட்சிகளும் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.