யாழில் சர்ச்சையை கிளப்பிய யூரியூபரை மடக்கிப் பிடித்த மக்கள்!
SK Vlog என்ற பெயரில், உதவி செய்கின்ற காணொளிகளை பதிவேற்றம் செய்யும் யூரியூப் சனல் ஒன்றினை நடாத்தி வருகின்ற கிருஷ்ணா என்பவர் சற்று முன்னர் பண்டத்தரிப்பு மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை காவல்துறையினரிடம் ஒப்படைப்பட்டுள்ளார்.
குறித்த யூரியூபர் பெண்ணொருவரை அவமானப்படுத்துவது போன்று பேசி காணொளியொன்று வெளிவந்த நிலையில், அது சர்ச்சையாக மாறி இருந்தது.
அத்தோடு, இந்த விடயமானது, நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கூட பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.
விசாரணைகள்
அந்த வகையில் பல்வேறு தரப்பினரும் குறித்த நபருக்கும் இருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இந்த நிலையில், சர்ச்சையான காணொளியில் உள்ள குடும்பத்தின் வீட்டிற்கு இன்றையதினம் யூரியூபர் வந்திருந்த வேளை, ஊரவர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு இளவாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்