விண்ணைத் தொடும் தேங்காயின் விலை: உணவு உற்பத்தி பாதிப்படையும் அபாயம்

Litro Gas Price Sri Lanka Food Crisis Economy of Sri Lanka Value Added Tax​ (VAT)
By Kathirpriya Mar 04, 2024 08:26 AM GMT
Report

தேங்காயின் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்வடைந்திருப்பதனால் அதில் தங்கியுள்ள உணவு உற்பத்தி மற்றும் விற்பனை கடுமையான பாதிப்பை சந்திக்கும் என உணவுத் தொழில்துறை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இந்த விலை அதிகரிப்பானது எதிர்காலத்தில் பொதிசெய்யப்பட்ட கறி உணவுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் ஏனெனில் பெரும்பாலான கறிகள் தேங்காய் கிரீம் கொண்டு தயாரிக்கப்படுவதால் அந்த உணவு உற்பத்தியாளர்கள் நெருக்கடியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

60 ரூபாய் முதல் 80 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டு வந்த தேங்காய் தற்போது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ருக்ஷான் ஹர்ஷன தெரிவித்துள்ளார்.

பொருட்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை : சஜித் குற்றச்சாட்டு

பொருட்களின் விலையை குறைப்பதற்கு அரசாங்கத்திடம் பணம் இல்லை : சஜித் குற்றச்சாட்டு

அதிக விலை

நேற்றைய தினம் (04) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருந்தார், தவிரவும் அவர் ஒரு தேங்காய் தற்போது 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

விண்ணைத் தொடும் தேங்காயின் விலை: உணவு உற்பத்தி பாதிப்படையும் அபாயம் | Skyrocketing Coconut Price Is Affect Food Industry

அதிகரித்துள்ள தேங்காய் விலையின் கீழ் சாதம் மற்றும் கறி சாப்பாட்டு பொதிகளை தயார் செய்ய முடியாமல் சிற்றூண்டிச் சாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், இதனால் உணவுப் பொதிகளை அதிக விலைக்கு விற்க வேண்டிய நிச்சயமற்ற சூழல் உருவாகி இருப்பதாகவும் அவர் கூறினார்.

கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

திடீர் அதிகரிப்பு

அரிசி, கோழி இறைச்சி, முட்டை, எரிவாயு உள்ளிட்ட அனைத்தின் விலைகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ள நிலையில் தேங்காய்களின் விலையிலும் எதிர்பாராத உயர்வு ஏற்பட்டுள்ளது.

விண்ணைத் தொடும் தேங்காயின் விலை: உணவு உற்பத்தி பாதிப்படையும் அபாயம் | Skyrocketing Coconut Price Is Affect Food Industry

தேங்காய்களின் விலையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் அதிகரிப்பு காரணமாக எதிர்வரும் நாட்களில் தேங்காய் எண்ணெயின் விலையும் உயரும் என ஹர்ஷன எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு

நாட்டில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்