வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள்: காவல்துறை மா அதிபர் வெளியிட்ட தகவல்
வெளிநாடுகளில் உள்ள குற்றவாளிகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் (Deshabandu tennakoon) தெரிவித்துள்ளார்.
அத்தோடு,இது தொடர்பில் பொதுமக்கள் ஒருபோதும் அச்சப்பட வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டு்ள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்கள்
இந்த நிலையில், இலங்கையில் குற்றச் செயல்களை புரியும் கும்பல்களை இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் மிகச் சிறந்த திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேசபந்து தென்னக்கோன் குறிப்பிட்டு்ள்ளார்.
இதனையடுத்து , கடந்த 3, 4 மாதங்களில் 800 க்கும் மேற்பட்ட பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழுக்கள்
இந்தநிலையில்,மக்களின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதாகவும், கடந்த இரண்டரை மாதங்களில் எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை எனவும் காவல்துறை மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து அண்மைய சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நான்கில் மூன்று பாதாள உலகக் குழுக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய சிலர் தொடர்பில் தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை மா அதிபர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |