தொடரும் சாவகச்சேரி விவகாரம்: வைத்தியர் அர்ச்சுனா மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை
நாளைய தினம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் வருகை தந்து எனக்கு உத்தியோகபூர்வமாக கடிதம் தந்தால் நான் அதனை ஏற்றுக்கொள்வேன் என வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archuna) தெரிவித்துள்ளார்.
நான் எந்த வைத்தியசாலையில் பணியாற்றப் போகின்றேன் என்பதும் என்ன முடிவு எடுக்கப் போகின்றேன் என்பதும் எனக்கு வழங்கப்படவிருக்கின்ற கடிதத்தைப் பொறுத்து தான் அமையும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
சாவகச்சேரி வைத்தியசாலையில் இன்றைய தினம் (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியர் ரஜீவை வெளியேற்றி விட்டு நாற்காலியில் அமர்ந்த அர்ச்சுனா : சாவகச்சேரி வைத்தியசாலையில் அதிரடி
அநீதிக்கு எதிரான போராட்டம்
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “நாளைய தினம் சுகாதார அமைச்சிலிருந்து வருகை தருபவர்களுக்கு சாவகச்சேரி வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடுகளை கடிதங்கள் மூலம் தெளிவாக சமர்ப்பியுங்கள்.
சாவகச்சேரி வைத்தியசாலையையோ, வைத்தியசாலைக்கு வருகை தருபவர்களையோ அல்லது வைத்தியர் ரஜீவ் ஆகியோரையோ தொந்தரவு செய்வது எனது நோக்கமல்ல.
எனது வேலையை வைத்தியர் ரஜீவ் செய்வாராக இருந்தால் அதுவும் எனக்கு சந்தோஷமே, அத்தோடு நடைபெற்ற பேராட்டமானது என்னை சுற்றிய போராட்டமல்ல, அநீதிக்கு எதிராக நடைபெற்ற போராட்டம்.
சாவகச்சேரி வைத்தியசாலைக்கு என்னால் முடிந்த அனைத்து விடயங்களையும் நான் செய்து தந்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.
எனக்கு மட்டுமல்ல...25 வைத்தியர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் : வைத்தியர் அர்ச்சுனா வேண்டுகோள்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |