செயற்கைக்கோளினை அனுப்ப திட்டமிட்டுள்ள ஆர்தர் சி. கிளார்க் மையம்
Sri Lanka
Satellites
Sri Lankan Schools
Technology
By Sathangani
எதிர்வரும் ஆண்டில் ஆர்தர் சி. கிளார்க் மையம் (Arthur C. Clarke Institute) செயற்கைக்கோள் ஒன்றினை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன (Santhana Jayaratne) தெரிவித்துள்ளார்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பம் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கைக்கோள் தொழில்நுட்பம்
அத்துடன், செயற்கைக்கோள் தொழில்நுட்பம் குறித்த அறிவு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
இதேவேளை, இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்