சட்டவிரோதமாக இரத்தின கற்களை கடத்த முயன்ற பெண் கைது
Sri Lanka Customs
By Beulah
இரத்தின கற்களை சட்டவிரோதமாக சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சுமார் 29 கோடி 10 இலட்ச ரூபாவுக்கும் அதிக பெறுமதியான இரத்தின கற்களை சட்டவிரோதமாக இன்று(30) காலை கடத்தி செல்ல முற்படுகையிலேயே குறித்த பெண் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்

ஒருகொடவத்த பகுதியை சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.