நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 72,430 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் (15) மாத்திரம் 1,195 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 17,051 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
49 பேர் உயிரிழப்பு
குறித்த நோயாளர்களில் அதிகளவான நோயாளர்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கை 38,160 ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தென் மாகாணத்தில் 11,274 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 6,073 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 6,026 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில் கம்பஹா மாவட்டத்தில் 15,082 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 14,447 நோயாளர்களும், மாத்தறை மாவட்டத்தில் 5,124 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
டெங்கு தொற்று காரணமாக இதுவரையான காலப்பகுதியில் 49 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரச்சினை என்றால் வெறியேறு! அர்ச்சுனாவின் கருத்தால் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஆவேசமடைந்த பிரதிநிதிகள்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |