மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து! விமர்சனங்களை கண்டித்துள்ள சுதந்திர கட்சி
சிறிலங்கா சுதந்திர கட்சியை அவமதிக்கும் வகையில் முன்வைக்கப்படும் கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தமது கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் தொடர்பில் தவறான செய்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் சாரதி துஷ்மந்த மித்ரபால சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை தான் அறிந்திருப்பதாக மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய கருத்து
இதையடுத்து, இந்த விடயம் தொடர்பான வாக்குமூலத்தை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர் கடந்த திங்கட்கிழமை வழங்கியிருந்தார்.
இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு, பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக சாரதி துஷ்மந்த மித்ரபால சுட்டிக்காட்டியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திரிவுபடுத்தப்பட்ட தகவல்கள்
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ள நிலையில், இதன் உள்ளடக்கம் தொடர்பில் பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் உண்மைக்கு புறம்பான திரிவுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி வருவதாக சாரதி துஷ்மந்த மித்ரபால குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கமைய, சிறிலங்கா சுதந்திர கட்சி தொடர்பில் வெளியாகும் தவறான தகவல்களை வன்மையாக கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |