இலங்கையில் தேர்தல் நடத்தப்படாமை குறித்து பிரித்தானிய உயர்ஸ்தானிகரை அறியப்படுத்திய ஜே.வி.பி!
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பேட்ரிக்கை மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று (22) சந்தித்துள்ளார்.
கட்சி தலைமையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக அநுரகுமார திஸாநாயக்க தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் கட்சியின் உறுப்பினரான விஜித ஹேரத்தும் கலந்து கொண்டுள்ளார்.
இரு தரப்பினருக்கிடையிலான கலந்துரையாடல்
இதன் போது, சமகால அரசியல் மற்றும் பொருளாதாரம் தொடர்பான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையில் தேர்தலை நடத்த சிறிலங்கா அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காமை குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Met the British High Commissioner in Sri Lanka, Mr. Andrew Patrick, at the J.V.P. head office today (22) afternoon.
— Anura Kumara Dissanayake (@anuradisanayake) November 22, 2023
Mr. Tom Soper, the first secretary of the political department of the British High Commission and Comrade Vijitha Herath, the National Executive member of the… pic.twitter.com/nepDpAnhqn
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |