தேர்தலை முன்னிட்டு இடம்பெறும் கட்சித்தாவல்கள்! ரணிலை ஆதரிக்கும் எம்.பிக்கள்
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை இலக்காக கொண்டு கட்சித்தாவல்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், தேசிய சுதந்திர முன்னணியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ (Nimal Piyathissa) தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கட்சித்தாவல்கள்
அதேநேரம், உத்தர லங்கா கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போதைய அரசாங்கத்தின் பக்கம் தாவவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தல் தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை அதிபர் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டதன் பின்னர், குறித்த தரப்பினர் கட்சித்தாவவுள்ளதாக நிமல் பியதிஸ்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்க்கட்சியில் உள்ள சில உறுப்பினர்கள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளில் உள்ள சில உறுப்பினர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் பின்னணியில், இந்த தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |