இலங்கைக்கு மற்றுமொரு நெருக்கடி - சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்படும் அபாயம்
SriLankan Airlines
Sri Lanka Economic Crisis
Sri Lanka Fuel Crisis
By Vanan
இலங்கைக்கு வரும் விமானங்களை அடுத்த பயணங்களுக்கான எரிபொருளை நிரப்பி வருமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையின் எரிபொருள் இருப்பு குறைந்துள்ளதாக அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமான பயணங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அல்லது தற்காலிகமாக நிறுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விமான சேவை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை இன்றைய முக்கிய செய்தியில் காண்க,
