இலங்கை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் : அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை உள்ளூராட்சிமன்றத் தேர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை இலங்கை வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல்
இதனடிப்படையில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி உள்ளூராட்சிமன்றத் தேர்தலை விரைவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரண்டு வருடங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வேட்பு மனுக்களில் சில வேட்பாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் சிலர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், புதிய வேட்புமனுக்களை அழைப்பதா இல்லையா என்பதை ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடி தீர்மானிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறும் எனவும் திகதிகள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |