வெடுக்குநாறி மலையில் கோயில்கள் கிடையாது! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Parliament of Sri Lanka Vavuniya Tiran Alles Eastern Province Northern Province of Sri Lanka
By Eunice Ruth Mar 21, 2024 02:52 PM GMT
Report

வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வர் ஆலயத்தில் அண்மையில் இடம்பெற்ற சிவாராத்திரி வழிபாடுகளின் போது குழப்பங்கள் ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது குறித்த இடத்தில் கோயில்கள் ஏதும் கிடையாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். 

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என இன்றைய (21) நாடாளுமன்ற விவாதத்தின் போது அவர் கூறியுள்ளார்.

இதன் போது மேலும் உரையாற்றிய அவர், “நாடாளுமன்ற விவாதத்தின் போது வெடுக்குநாறிமலை பற்றி பேசப்பட்டது.

கோயில்கள் இல்லை

கோயிலுக்கு சென்றவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது. வெடுக்குநாறி மலையில் எந்த கோயில்களும் இல்லை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறேன்.

வெடுக்குநாறி மலையில் கோயில்கள் கிடையாது! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sl North East Vedukkunari Tamils Issue Heritage

மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு!

மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான பிரேரணை தோற்கடிப்பு!

இந்த மலையை தொல்பொருள் திணைக்களம் அநுராதபுர யுகத்துக்கு சொந்தமான தொல்பொருள் மரபுரிமைகள் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தியுள்ளது.

பௌத்த மத மரபுரிமைகள் உள்ள பகுதியில் பிறிதொரு தரப்பினர் தமது மத வழிபாடுகளை முன்னெடுக்கும் போது முரண்பாடுகளே தோற்றம் பெறும்.

தோன்றிய பிரச்சினைகள்

கடந்த 2023 ஆம் ஆண்டு இந்த மலையில் சட்டவிரோதமான முறையில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றன.

வெடுக்குநாறி மலையில் கோயில்கள் கிடையாது! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sl North East Vedukkunari Tamils Issue Heritage

கோப் குழுவில் இருந்து டிலானும் விலகல்!

கோப் குழுவில் இருந்து டிலானும் விலகல்!

இதனை தொடர்ந்து, கடந்த 4 ஆம் திகதி மதிமுகராசா என்ற பூசகர் வெடுக்குநாறி மலையில் பூஜை வழிபாட்டில் ஈடுபட வவுனியா நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரியுள்ளார்.

இந்த கோரிக்கையை நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று 400 பேர் வரை இந்த மலைக்கு சென்றுள்ளார்கள்.

சிவராத்திரி வழிபாடுகள்

மாலை 6 மணி வரை மலையில் இருக்க முடியும், 6 மணிக்கு பின்னர் அங்கு எவரும் இருக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்த நிலையில், சுமார் 40 பேர் இரவு 8 மணிவரை அங்கு இருந்துள்ளார்கள்.

வெடுக்குநாறி மலையில் கோயில்கள் கிடையாது! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sl North East Vedukkunari Tamils Issue Heritage

100 ஆண்டுகள் முன்னோக்கி சென்ற ஜப்பான்... ஸ்மார்ட் நகரத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா!

100 ஆண்டுகள் முன்னோக்கி சென்ற ஜப்பான்... ஸ்மார்ட் நகரத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா!

வெடுக்குநாறிமாலையில் இரவு 8 மணிவரை தங்யிருந்தவர்கள் அடுப்பு பற்ற வைத்து சட்டவிரோதமான முறையில் செயற்பட முற்படுகையில் தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் இச்செயற்பாட்டை தடுத்து நிறுத்துமாறு காவல்துறையினரை அறிவுறுத்தியது.

இதன் பின்னரே 8 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். பௌத்த மரபுரிமைகள் உள்ள இடங்களுக்கு சென்று முறையற்ற வகையில் செயற்பட்டால் பிரச்சினைகளே தீவிரமடையும்.

தொடரும் கைது 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. சட்டவிரோதமான முறையில் எவர் செயற்பட்டாலும் கைதுகள் இடம்பெறும்.

வெடுக்குநாறி மலையில் கோயில்கள் கிடையாது! விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sl North East Vedukkunari Tamils Issue Heritage

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது!

புதுக்குடியிருப்பில் சட்டவிரோத கசிப்புடன் ஒருவர் கைது!

இந்து கோயில்களுக்கு சென்று பிற மதத்தவர்கள் முறையற்ற வகையில் செயற்பட்டால் அவர்களையும் நாங்கள் கைது செய்வோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண வாக்குகளை எதிர்பார்த்து ஒருதலைபட்சமாக கருத்து தெரிவிப்பதை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
நன்றி நவிலல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், மானிப்பாய், London, United Kingdom, கனடா, Canada

02 Nov, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வெள்ளவத்தை

01 Nov, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மீரிகம, மன்னார், ஸ்கந்தபுரம்

04 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024