அம்பாந்தோட்டையில் ராஜபக்சாக்களின் கோட்டையை தகர்த்த அநுரவின் படை
விருப்பு வாக்கு முடிவுகள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 5 ஆசனங்கள்
நிஹால் கலப்பத்தி - 125,983
அதுல ஹேவகே - 73,198
சாலிய மதரசிங்க - 65,969
அரவிந்த விதாரண - 48,807
பிரபா செனரத் - 42,249
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
திலீப் வெதஆராச்சி - 23,514
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1
டீ.வி. சானக - 16,546
அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி கட்சியினர் 234,083 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 05 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி 52,170 வாக்குகளை பெற்று 01 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.
மேலும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் 52,170 வாக்குகளை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன், 1 ஆசனத்தினை வெற்றிகொண்டுள்ளனர்.
இதேவேளை, சிறிலங்காக பொதுஜன பெரமுன கட்சியினர் 26,268 வாக்குகளை அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளதுடன் 1 ஆசனத்தினை வெற்றிகொண்டுள்ளனர்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சி18,297 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் எவ்வித ஆசனங்களையும் வெற்றிகொள்ளவில்லை.
இந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகளின் எண்ணிக்கை 520,940 ஆகும்.
அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை, 369,700 செல்லுபடியாகும் வாக்குகளின் எண்ணிக்கை 352,661 நிராகரிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை 17,039 ஆகும்.
2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்
இதேவேளை, கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது அம்பாந்தோட்டை மாவட்டத்தில், அதிகூடிய வாக்குகள் மற்றும் ஆசனங்களை சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெற்றுக் கொண்டிருந்தது.
இதன்படி, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 280,881 வாக்குகளையும் 6 ஆசனங்களையும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெற்றிகொண்டது.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 51,758 வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன், 1 ஆசனத்தை வெற்றிகொண்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி கட்சியினர் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 31,362 வாக்குகளைப் பெற்றுக்கொண்டதுடன், ஆசனங்கள் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சி, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 5,017 வாக்குகளைப் பெற்றுக் கொண்டதுடன் எவ்வித ஆசனங்களையும் பெற்றுக் கொள்ளவில்லை.
அம்பாந்தோட்டை - முள்கிரிகல தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் முள்கிரிகல தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் (NPP) 42699 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 10302 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 6042 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4281 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை - பெலியத்த தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்த தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் (NPP) 36,002 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 7,008 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 5,857 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 2,381 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை - திஸ்ஸமஹாராம
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் (NPP) 76,841 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 23,262 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 7,531 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 4,111 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை - தங்காலை தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை தேர்தல் தொகுதிக்கான வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் (NPP) 61215 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 9975 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 6750 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 5545 வாக்குகளைப் பெற்றுள்ளது.
தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள்
நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலின் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி கட்சியினர் (NPP) 17, 326 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி கட்சி (SJB) 1623 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) 1293 வாக்குகளைப் பெற்றுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி கட்சி (NDF) 774 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |