இந்தியாவில் இருந்து வாகனம் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்
இந்தியாவில் இருந்து சிறிலங்கா காவல்துறையினருக்கு சுமார் 750 ஜீப் வண்டிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
காவல்துறை விசேட அதிரடிப்படைக்கு 150 ஜீப்கள் உட்பட சிறிலங்கா காவல்துறையினருக்கு 750 ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் பிரகாரம் சிறிலங்கா காவல்துறையினருக்கான ஜீப் வண்டிகளை கொள்வனவு செய்யும் பொறுப்பு இந்தியாவின் மஹிந்திரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கு உட்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.